2021 புத்தாண்டு சர்ப்ரைஸ் வைத்திருக்கும் மோகன்லால் !

2021 புத்தாண்டு சர்ப்ரைஸ் வைத்திருக்கும் மோகன்லால் !

2013 ம் ஆண்டு ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் த்ரிஷ்யம்.

இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப்பெற்று பாக்ஸ் ஆபிசில் சக்கைபோடுபோட்டது.மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த திரைப்படம் தமிழிலும் வெளியானது.தமிழில் நடிகர் கமல் மற்றும் கௌதமி நடித்திருப்பர்.தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் மோகன்லால் ஜித்து ஜோசப் கூட்டணியில் த்ரிஷ்யம் 2 திரைப்படம் இயக்க முடிவானது.

2021 புத்தாண்டு சர்ப்ரைஸ் வைத்திருக்கும் மோகன்லால் !

கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் -17ஆம் தேதி இதன் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக த்ரிஷ்யம் 2 படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது நடிகர் மோகன்லாலே படத்தின் டீஸர் வெளியாகும் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகார்வப் பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அதன்படி ,
த்ரிஷ்யம் 2 இன் டீஸர் ஜனவரி 1, 2021, காலை 00:00 மணிக்கு வெளியிடப்படும். இந்த புத்தாண்டு, ஜார்ஜ் குட்டி மற்றும் குடும்பத்தினர் கொண்டு வரவிருக்கும் ஆச்சரியத்திற்காக காத்திருங்கள். ஸ்டே ட்யூன்ட் # த்ரிஷ்யம் ‘, என பதிவிட்டுள்ளார்.

Share this story