ஓடிடியில் வெளியாகும் ‘திரிஷ்யம் 2’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

ஓடிடியில் வெளியாகும் ‘திரிஷ்யம் 2’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

திரிஷ்யம் 2 படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது.

ஓடிடியில் வெளியாகும் ‘திரிஷ்யம் 2’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

மோகன்லால் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம் ‘திரிஷ்யம்’. ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருந்தார். மாபெரும் வெற்றிப்பெற்ற இந்த படம் இந்திய அளவில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப் பெற்றது.

ஓடிடியில் வெளியாகும் ‘திரிஷ்யம் 2’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

ஒரு குற்றத்திலிருந்து தனது குடும்பத்தை காப்பாற்றும் சராசரி குடும்பத்தலைவனின் கதைதான் திரிஷ்யம் படம். 5 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் 75 கோடி வரை வசூலில் சாதனை படைத்தது. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இந்த படம் தமிழில் ரீமேக்கானது. திரிஷ்யம் என்ற பெயரை பாபநாசம் என்று மாற்றி தமிழில் நடிகர் கமல் உருவாக்கினார். இதில் மீனா கேரக்டரில் கவுதமி நடித்தார். மலையாளத்தை போன்று தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ஓடிடியில் வெளியாகும் ‘திரிஷ்யம் 2’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

இந்நிலையில் 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே இந்த படத்தை இயக்கியுள்ளார். மோகன்லால், மீனா இந்த படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

Share this story