விரைவில் முடிந்த படப்பிடிப்பு, கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகிறது த்ரிஷ்யம்-2 டீசர்

விரைவில் முடிந்த படப்பிடிப்பு, கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகிறது த்ரிஷ்யம்-2 டீசர்

மோகன்லால், மீனா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான மலையாள படம், த்ரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கி இருந்த இந்த படம் மலையாளத்தில்  சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகள் ரீமேக் செய்யப்பட்ட இந்தப்படம், அந்ததந்த மொழிகளிலும் மாபெரும் வெற்றிபெற்றது.விரைவில் முடிந்த படப்பிடிப்பு, கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகிறது த்ரிஷ்யம்-2 டீசர்
 
ஏழு ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இதே கூட்டணியில்  ‘த்ரிஷ்யம்-2’ என்கிற பெயரிலேயே உருவாகிறது. எதிர்பாராத விதமாக பிரச்னையில் சிக்கிகொல்லும் மகளையும், குடும்பத்தையும் காப்பாற்றப் போராடும் குடும்பத் தலைவன் ஜார்ஜ் குட்டியை மையப்படுத்தியதே இரண்டாம் பாகத்தின் கதையும் உருவாகியிருக்கிறது என்றும், முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகம் இன்னும் த்ரில்லிங்காக இருக்கும் என்றும் இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்திருந்தார்..விரைவில் முடிந்த படப்பிடிப்பு, கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகிறது த்ரிஷ்யம்-2 டீசர்

கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் -17ஆம் தேதி இதன் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் படப்பிடிப்பு அதற்குள்ளாகவே முடிவடைந்து விட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக த்ரிஷ்யம் 2 படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this story