தெலுங்கை தொடர்ந்து கன்னடத்தில் ரீமேக்காகும் ‘திரிஷ்யம் 2’… இயக்குனர் யார் தெரியுமா ?

தெலுங்கை தொடர்ந்து கன்னடத்தில் ரீமேக்காகும் ‘திரிஷ்யம் 2’… இயக்குனர் யார் தெரியுமா ?

‘திரிஷ்யம் 2’ வெற்றியை தொடர்ந்து கன்னடத்திலும் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டது.

தெலுங்கை தொடர்ந்து கன்னடத்தில் ரீமேக்காகும் ‘திரிஷ்யம் 2’… இயக்குனர் யார் தெரியுமா ?

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் வெற்றியை தொடர்ந்து ‘திரிஷ்யம் 2’ படமும் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது. முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. மோகன் லால், மீனா இணைந்து நடித்திருந்த இந்த படத்தற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது.

தெலுங்கை தொடர்ந்து கன்னடத்தில் ரீமேக்காகும் ‘திரிஷ்யம் 2’… இயக்குனர் யார் தெரியுமா ?

இந்த வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து திரிஷ்யம் 2 தெலுங்கில் ரீமேக் படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டாம் பாகத்திலும் வெங்கடேஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனா நடித்து வருகிறார். இவர்களுடன் நடிகைகள் பூர்ணா, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த மாதம் தொடங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தெலுங்கை தொடர்ந்து கன்னடத்தில் ரீமேக்காகும் ‘திரிஷ்யம் 2’… இயக்குனர் யார் தெரியுமா ?

இந்நிலையில் இந்த படத்தை கன்னடத்திலும் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன. முதல் பாகத்தில் நடித்த ரவிச்சந்திரன், நவ்யா நாயர் ஆகியோர் இந்த படத்திலும் நடிக்கின்றன. பி.வாசு இந்த படத்தை இயக்குகிறார். ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ஷூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Share this story