மற்ற மொழி பணிகளை ஆரம்பித்தார் ஜீத்து ஜோசப்….திரிஷ்யம் 2 ரீமேக் விறுவிறு…

மற்ற மொழி  பணிகளை ஆரம்பித்தார் ஜீத்து ஜோசப்….திரிஷ்யம் 2 ரீமேக் விறுவிறு…

திரிஷ்யம் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் பணியை இயக்குனர் ஜீத்து ஜோசப் தொடங்கியுள்ளார்.

மற்ற மொழி  பணிகளை ஆரம்பித்தார் ஜீத்து ஜோசப்….திரிஷ்யம் 2 ரீமேக் விறுவிறு…

கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘திரிஷ்யம்’. ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருந்தார். இந்திய அளவில் பாராட்டை பெற்ற இந்த படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. ரசிகர்கள் கொண்டாடிய இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் அடித்தது.

மற்ற மொழி  பணிகளை ஆரம்பித்தார் ஜீத்து ஜோசப்….திரிஷ்யம் 2 ரீமேக் விறுவிறு…

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் உருவான இப்படம் சீனா மொழியிலும் வெளியானது. ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்போவதாக தகவல் வெளியானது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் திரிஷ்யம் 2 என்ற பெயரில் உருவானது. கடந்த 19ம் தேதி வெளியான இப்படம் முதல் பாகத்தை போன்று விறுவிறுப்பு குறையாமல் அதே சுவாரஸ்யங்களோடு உள்ளது. 7 வருடங்களுக்கு பிறகு இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

இந்நிலையில் திரிஷ்யம் 2 மலையாளத்தின் வெற்றியை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்ய முடிவெடுத்து, அதற்கான பணிகளில் ஈடுப்பட்டு வந்தார் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப். தமிழில் முதலில் ரீமேக் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இதையடுத்து நடிகர் வெங்கடேஷ் மற்றும் படக்குழுவினரோடு இருக்கும் புகைப்படத்தை ஜீத்து ஜோசப் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தெலுங்கு ரீமேக்கிற்கு பிறகு தமிழ் ரீமேக் பணிகள் துவங்கும் என கூறப்படுகிறது.

Share this story