தவறான பாதையில் சென்ற துல்கர் சல்மான்… வைரல் வீடியோ!

தவறான பாதையில் சென்ற துல்கர் சல்மான்… வைரல் வீடியோ!

நடிகர் துல்கர் சல்மான் கார்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது கேரள ரசிகர்களுக்கு நன்கு தெரியும். விலையுயர்ந்த கார்களில் வேகமாக செல்வது துல்கருக்கு மிகவும் பிடிக்குமாம்.

தவறான பாதையில் சென்ற துல்கர் சல்மான்… வைரல் வீடியோ!

சமீபத்தில் துல்கர் தனது நீல நிற போர்ஸ் காரில் செல்லும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கேரளாவில் அலப்புழா பைபாஸ் அருகே ராங் வே-யில் தவறான பக்கத்தில் சிக்னலுக்காக காத்திருக்கிறார். அந்த வீடியோவைப் பார்க்கும்போது, ​​பைபாஸின் ஆரம்பத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக நடிகர் தவறான பாதையில் வந்துள்ளார் என்று தெரிகிறது.

பின்னர் அங்கு வந்த போக்குவரத்துக் காவலர் அவரைப் பின்னால் போகச் சொல்கிறார். அதையடுத்து துல்கர் சரியான பாதையில் செல்கிறார். இந்த சம்பவங்களை இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டே அவரைப் பின்தொடர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this story