தசரா திருநாளில் தெலுங்கு மக்களை திக்குமுக்காட வைத்த டோலிவுட் திரையுலகினர்!

தசரா திருநாளில் தெலுங்கு மக்களை திக்குமுக்காட வைத்த டோலிவுட் திரையுலகினர்!

இன்று தமிழ்நாட்டில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. மற்ற மாநிலங்களில் தசரா திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். இந்தத் திருநாளில் உருவாக்கிவிட்ட, உருவாக இருக்கும் படங்களின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

தமிழிலும் பல படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், டிரைலர்கள், டீசர்கள் என முக்கிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.
அதேபோல் டோலிவுட்டில் தசரா பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு மக்களுக்கு மிகப்பெரிய விருந்தே வைத்துள்ளனர் டோலிவுட் திரையுலகினர்.

தசரா திருநாளில் வெளியான தெலுங்கு படங்களின் போஸ்டர்கள் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

தசரா திருநாளில் தெலுங்கு மக்களை திக்குமுக்காட வைத்த டோலிவுட் திரையுலகினர்!

நடிகர் ரவி தேஜா நடிக்கும் க்ராக்(Krack) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கோபிசந்த் மலினேனி என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தசரா திருநாளில் தெலுங்கு மக்களை திக்குமுக்காட வைத்த டோலிவுட் திரையுலகினர்!


ரவி தேஜா நடிக்கும் மற்றொரு படமான ‘கில்லாடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகியுள்ளது. ரமேஷ் குமார் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மீனாட்சி சவுத்ரி ,மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகியோரும் நடிக்கின்றனர்.

தசரா திருநாளில் தெலுங்கு மக்களை திக்குமுக்காட வைத்த டோலிவுட் திரையுலகினர்!

நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘ரெட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அம்ரிதா ஐயர், நிவேதா பெத்துராஜ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். திருமலை கிஷோர் இப்படத்தை இயக்கியுள்ளார். மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த ஆண்டு அருண் விஜய் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான ‘தடம்’ படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக் ஆகும்.

தசரா திருநாளில் தெலுங்கு மக்களை திக்குமுக்காட வைத்த டோலிவுட் திரையுலகினர்!


நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். பவன் CH என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்

தசரா திருநாளில் தெலுங்கு மக்களை திக்குமுக்காட வைத்த டோலிவுட் திரையுலகினர்!


நடிகர் சர்வானந்த் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கும் ஸ்ரீகரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கிஷோர் என்பவர் இயக்குகிறார். மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். நடிகை பிரியங்கா அருள் மோகன் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this story