முதல்வருக்கு நன்றி சொல்லி ‘விஜய் மக்கள் இயக்கம்’ ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.!?

முதல்வருக்கு நன்றி சொல்லி ‘விஜய் மக்கள் இயக்கம்’ ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.!?

கடந்த ஒரு வாரமாகவே மாஸ்டர் படத்தைப்பற்றி தான் மாறி மாறி அப்டேட் நியூஸ்களாக வந்து கொண்டிருக்கிறது! 100 சதவிகித பார்வையாளர்களுக்கு விஜய் அனுமதி கேட்டதும், முதல்வர் அதற்கு அரசாணை வெளியிட்டதும் இப்போது வரை பரபரப்பாகவே இருக்கிறது.

முதல்வருக்கு நன்றி சொல்லி ‘விஜய் மக்கள் இயக்கம்’ ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.!?

கொரோனா தொற்று முழுமையாக விலகாத நிலையில் இப்படியொரு முடிவெடுத்தது தவறு என்று, மருத்துவர்கள் தொடங்கி சகலரும் இந்த நிமிடம் வரை கருத்து சொல்லி வருகிறார்கள். தமிழக அரசு, ஏற்கனவே கொடுத்த அரசாணையை ரத்து செய்யவே அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன தகவல் விஜய் ரசிகர் மன்றத்தினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

முதல்வருக்கு நன்றி சொல்லி ‘விஜய் மக்கள் இயக்கம்’ ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.!?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, கொரோனா தொற்று குறைந்திருப்பதால்தான் முதல்வர் இப்படியொரு அனுமதி கொடுத்தார். மத்திய அரசு சொல்லிய சில வழிகாட்டுதலின் படி இன்று நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன். என்று மட்டும்தான் சொன்னார்.

முதல்வருக்கு நன்றி சொல்லி ‘விஜய் மக்கள் இயக்கம்’ ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.!?

இன்று காலை,சென்னை அண்ணா சாலை உட்பட பல இடங்களில் முதலாவருக்கு கைகொடுத்து நன்றி சொல்வதைப்போல் ஒரு படத்தைப் போட்டு ‘நன்றி முதல்வரே’ என்ற வாசகத்தோடு ஒட்டிய போஸ்டரால் அரசியல் வட்டாரத்தில் சூடு கிளப்பியிருக்கிறது! தவிர,போஸ்டரின் இறுதியில் ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்று போட்டிருப்பதால், உண்மையில் இந்தப் போஸ்டரை விஜய் ரசிகர் மன்றத்தினர்தான் ஒட்டினார்களா… அல்லது விஜயின் அப்பா தரப்பு ஆட்கள் ஒட்டினார்களா என்ற குழப்பமும் எழுந்திருக்கிறது!

Share this story