கமல்ஹாசன்- லோகேஷ் கனகராஜின் வெறித்தன கூட்டணியில் இணைந்த ஃபஹத் பாசில்!

கமல்ஹாசன்- லோகேஷ் கனகராஜின் வெறித்தன கூட்டணியில் இணைந்த ஃபஹத் பாசில்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் விக்ரம் படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் பாசில் இணைந்துள்ளார்.

மாஸ்டர் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

கமல்ஹாசன்- லோகேஷ் கனகராஜின் வெறித்தன கூட்டணியில் இணைந்த ஃபஹத் பாசில்!

இந்தப் படத்தின் டைட்டில் வெளியீட்டு டீசருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களப் பணிகளை முடித்துவிட்டு விக்ரம் பட படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் தற்போதைய அப்டேட் என்னவென்றால், விக்ரம் படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் பாசில் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் இணைந்துள்ளதை ஃபஹத் பாசிலே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்- லோகேஷ் கனகராஜின் வெறித்தன கூட்டணியில் இணைந்த ஃபஹத் பாசில்!

ஃபஹத் இதற்கு முன்னர் ‘வேலைக்காரன்’ மற்றும் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் விக்ரம் படத்தில் இணைந்துள்ளது கோலிவுட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் ஃபஹத் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது என்று கூறலாம்.

Share this story