விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்!?

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்!?

விஜய் சேதுபதி நடித்து வரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் பிரபல இயக்குனர் வில்லனாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்!?

அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மேகா ஆகாஷ், விவேக் இயக்குனர் மோகன் ராஜா, விஸ்வகுமார் ஆகியோரும் நடிக்கின்றனர். சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்திற்கு கே.பிரசன்னா இசையமைக்கிறார். 

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்!?

தற்போது இந்தப் படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. மீகாமன், தடம் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் மகிழ் திருமேனி இப்படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் அவர் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story