இறுதிச் சுற்று தயாரிப்பாளர் இயக்கும் பண்டைய தெய்வத்தின் கதை !

இறுதிச் சுற்று தயாரிப்பாளர் இயக்கும் பண்டைய தெய்வத்தின் கதை !

தமிழில் அட்டகத்தி, சூது கவ்வும், பீட்சா, முண்டாசுப்பட்டி, இறுதிச் சுற்று உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள சிவி குமார் தொன்மையான கடவுளைப் பற்றி படம் எடுக்க உள்ளாராம்.
சந்தீப் கிஷான் நடிப்பில் வெளியான மாயவன் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமான இவர் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இவர் தற்போது பாண்டிய தமிழ் கடவுளைப் பற்றிய சாகசத் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதையல் வேட்டையைப் பற்றிய உண்மை மற்றும் கற்பனை கலந்த ஒரு படமாக இப்படம் அமையுள்ளதாம்.இதுகுறித்து பேசிய இயக்குனர் குமார்,கொற்றவை 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்களால் வணங்கப்பட்ட ஒரு பண்டைய தெய்வம் அதுபற்றிய கதைக்களம் இப்படத்தில் அமைந்துள்ளது என தெறிவித்துள்ளார்.

இறுதிச் சுற்று தயாரிப்பாளர் இயக்கும் பண்டைய தெய்வத்தின் கதை !

இப்படத்தில் இயக்குனர் கவுரவ் நாராயணன், வேலராமமூர்த்தி, அனுபமா குமார் மற்றும் பவன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.இப்படப்பிடிப்பு காரைக்குடியில் விரைவில் தொடங்கவுள்ளது.பொதுவாக ஹாலிவுட்டில் தான் இதுபோன்ற கதைக்களம் அமைத்திருக்கும்.அதைப்போல தி டா வின்சி கோட், நேஷனல் டிரஸர் சீரிஸ் வகையில் இப்படம் உருவாக இருக்கிறது. தமிழில் உருவாகும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமென நம்பப்படுகிறது.

Share this story