மக்களே உஷார்! புதுவித ஆன்லைன் மோசடியில் ஏமாந்த பிரபல இயக்குனர்!

மக்களே உஷார்! புதுவித ஆன்லைன் மோசடியில் ஏமாந்த பிரபல இயக்குனர்!

தற்போதெல்லாம் பொதுமக்கள் மட்டுமல்ல, முக்கியப் புள்ளிகள், பிரபலங்கள் கூட ஆன்லைன் மோசடிக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி குடுமுலா இந்த மாதிரி ஒரு ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துள்ளார்.

சமீபத்தில், அடையாளம் தெரியாத ஒருவர் வெங்கி குடுமுலாவை அழைத்து தன்னை சர்வதேச திரைப்பட விழாவின் குழு உறுப்பினராக அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் வெங்கி இயக்கிய பீஷ்மா திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக அவரிடம் கூறியுள்ளார். இதை இயக்குனரும் நம்பியுள்ளார்.

மக்களே உஷார்! புதுவித ஆன்லைன் மோசடியில் ஏமாந்த பிரபல இயக்குனர்!

பின்னர் திரைப்பட விழாவிற்கு நுழைவுக் கட்டணமாக 66000 ரூபாய் செலுத்துமாறும் அந்த மர்ம நபர் கேட்டுள்ளார். வெங்கியும் தொகையை அந்த நபரின் வங்கிக் கணக்கில் போட்டுள்ளார். பின்னர் மறுநாளும் அந்த மர்ம நபர் இயக்குனரை அழைத்து மேலும் பணம் செலுத்துமாறு கேட்டுள்ளார். ஏனெனில் பீஷ்மா படத்தை 6 வெவ்வேறு பிரிவுகளில் பரிந்துரைப்பதில் தவறு ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்த இயக்குனர் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். தற்போது இருவரின் உரையாடல்கள், பணம் பரிமாற்றப்பட்ட வங்கிக் கணக்கு இவற்றை வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this story