அடுத்த ஆக்ஷன் அதிரடியில் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

அடுத்த ஆக்ஷன் அதிரடியில் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

உலக ரசிகர்கள் எதிர்பார்த்த ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ அடுத்த பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆக்ஷன் அதிரடியில் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

ஹாலிவுட் சினிமாவில் வெளியாகும் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ திரைப்படங்களுக்கு ரசிகர்கள் எப்போதும் தனி கவனம் செலுத்துகின்றனர். கார் ரேஸ் பிரியர்களுக்கு சொல்லவே தேவையில்லை. இந்த படம் வெளியாகும் போது திருவிழாதான். எத்தனையே கார் ரேஸ் படங்கள் வந்தால்கூட இந்த படத்திற்கு ஈடுடிணை கிடையாது.

அடுத்த ஆக்ஷன் அதிரடியில் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ வரிசையில் இதுவரை 8 பாகங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் வின் டீசல், மிச்செல் ரோட்ரிகஸ், ஜோர்டானா ப்ரீவ்ஸ்டார், ஈவா மெண்டஸ், டைரிஸ் கிப்சன், கிரிஸ் பிரிட்ஜஸ், லூகாஸ் பிளாக், சங் காங், கேல் கேடட், ஜேசன் ஸ்டாதம் டுவைன் ஜான்சன், கர்ட் ரசல், நாதாலியா இம்மானுவேல், சார்லஸ் தெரோன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். 
எத்தனை படங்களை வந்தாலும் இந்த படங்களுக்கு மவுசு குறைவதில்லை.

அடுத்த ஆக்ஷன் அதிரடியில் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

இந்த வரிசை படங்களில் அடுத்து வெளியாகியுள்ள படத்தின் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 9வது பாகமாக உருவாகியுள்ள ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஜூன் மாதம் 25-ந் தேதி உலகம் முழுவதும் இந்த படம் வெளியிடப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story