குரோர்பதி நிகழ்ச்சியில் இடம் பெற்ற மனுஸ்மிருதி பற்றி கேள்வி…. அமிதாப் பச்சன் மீது ஃஎப்ஐஆர் பதிவு!

குரோர்பதி நிகழ்ச்சியில் இடம் பெற்ற மனுஸ்மிருதி பற்றி கேள்வி…. அமிதாப் பச்சன் மீது ஃஎப்ஐஆர் பதிவு!

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வந்த ரியாலிட்டி ஷோவான ‘கவுன் பனேகா குரோர்பதி’-யில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்காக அந்த நிகழ்ச்சி மீதும் அமிதாப் பச்சன் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் இந்தி வெர்ஷனை அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது ஒளிபரப்பாகி வரும் 12-வது சீசன் செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Image

இந்நிலையில் கடந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் மற்றும் நடிகர் அனூப் சோனி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். அப்போது அவர்களிடம் மனுஸ்மிருதி தொடர்பான கேள்வியை எழுப்பப்பட்டது அந்நிகழ்ச்சியை சிக்கலுக்கு ஆளாகியுள்ளது.

அதில் ரூ .6,40,000 பரிசுத் தொகைக்கான கேள்வி: “1927 டிசம்பர் 25 அன்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரும் அவரது ஆதரவாளர்களும் எந்த வசனத்தின் நகல்களை எரித்தனர்? விடைக்கான தேர்வுகள்: அ) விஷ்ணு புராணம், ஆ) பகவத் கீதை, இ) ரிக்தேவ், மற்றும் ஈ) மனுஸ்மிருதி.

குரோர்பதி நிகழ்ச்சியில் இடம் பெற்ற மனுஸ்மிருதி பற்றி கேள்வி…. அமிதாப் பச்சன் மீது ஃஎப்ஐஆர் பதிவு!

போட்டியாளர்கள் இந்த கேள்விக்கு பதிலளித்த பின்னர் “1927 ஆம் ஆண்டில், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமையை கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்துவதற்காக பண்டைய இந்து நூலான மனுஸ்மிருதியைக் கண்டித்ததுடன் அதன் நகல்களையும் எரித்தார்.” என்று அமிதாப் பச்சன் கூறினார்.

அந்நிகழ்ச்சியில் இந்த கேள்வி எழுப்பப்பட்டது சமூக வலைத்தளங்களில் கண்டனத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக “இடதுசாரி பிரச்சாரத்தை” ஊக்குவிப்பதாக ஒரு பகுதியினரும், “இந்து உணர்வுகளை புண்படுத்தியதாக” மற்றொரு பிரிவினரும் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து குரோர்பதி நிகழ்ச்சி மீதும் அமிதாப் பச்சன் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுளளது.

Share this story