அஜய் தேவ்கனின் பிறந்தநாளுக்கு ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவின் ஸ்பெஷல் ட்ரீட்!

அஜய் தேவ்கனின் பிறந்தநாளுக்கு ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவின் ஸ்பெஷல் ட்ரீட்!

‘ஆர்ஆர்ஆர்’ படத்திலிருந்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் எனும் பிரம்மாண்ட திரைப்படம் உருவாகி வருகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராமராஜு மற்றும் கொமாராம் பீம் ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. ராம் சரண் அல்லூரி ராம்ராஜு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆர்ம், கொமாராம் பீம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அஜய் தேவ்கனின் பிறந்தநாளுக்கு ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவின் ஸ்பெஷல் ட்ரீட்!

இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் போஸ்டர்களுக்கு மக்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பாட் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அஜய் தேவ்கனின் பிறந்தநாளுக்கு ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவின் ஸ்பெஷல் ட்ரீட்!

தற்போது அஜய் தேவ்கனின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வரும் ஏப்ரல் 2-ம் தேதி அஜய் தேவ்கனின் பிறந்தநாள் அன்று அவரது பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story