ஆலியா சீதாவாக ஜொலிக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

ஆலியா சீதாவாக ஜொலிக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் சீதாவாக நடிக்கும் ஆலியா பாட்டின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

பாஹூபலியை அடுத்து ஆர்ஆர்ஆர் என்னும் பிரம்மாண்ட படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களான ராமராஜு மற்றும் கொமாரம் பீம் ஆகியோர் கதாபாத்திரங்களில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர்.

ஆலியா சீதாவாக ஜொலிக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

இப்படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் ராம் சரணுக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது ஆலியா சீதாவாக நடிக்கும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ராமனின் வருகைக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் சீதாவாக பர்ஸ்ட் லுக் காணப்படுகிறார் ஆலியா. இந்தப் பர்ஸ்ட் லுக் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆலியா சீதாவாக ஜொலிக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஷ்ரேயா சரண் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் அக்டோபர் மாதம் 13-ம் தேதி வெளியாக இருக்கிறது.

ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளனர்.

Share this story