கேஜிஎஃப் இயக்குனருடன் பிரபாஸ் கூட்டணி… வெளியானது மிரட்டல் பர்ஸ்ட் லுக்!

கேஜிஎஃப் இயக்குனருடன் பிரபாஸ் கூட்டணி… வெளியானது மிரட்டல் பர்ஸ்ட் லுக்!

கேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

‘கேஜிஎஃப்’ என்ற ஒரு படத்தின் மூலமே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரஷாந்த் நீல். தற்போது ‘கேஜிஎஃப் 2’ படத்திற்காக மிகவும் மும்மரமாக பணியாற்றி வருகிறார்.
Prashanth Neel (@prashanth_neel) | Twitter
தனது இரண்டாவது படத்திலே அனைவரையும் வியக்க வைத்த பிரஷாந்த் நீல் அடுத்து யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகிறது.

இந்நிலையில் பிரஷாந்த் பிரபாஸுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் உலா வந்தன. தற்போது அவை உறுதியாகியிருக்கிறது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘சலார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் பிரபாஸ் முறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் காணப்படுகிறார். இப்படத்தை கேஜிஎப் படத்தைத் தயாரித்த ஹம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இப்படம் தொடங்க இருக்கிறது.

ஏற்கனவே பிரபாஸ் ராதே கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். பின்னர் நாக் அஸ்வின் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். அப்படத்தில் தீபிகா படுகோன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரும் நடிக்கின்றனர். அதையடுத்து ஓம் ரவுத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ படத்திலும் நடிக்க உள்ளார். இப்படி இடைவெளி இல்லாமல் பிரம்மாண்ட அறிவிப்புகளை வெளியிட்டு தனது ரசிகர்களை திக்குமுக்காடச் செய்து வருகிறார்.

Share this story