அசோக் செல்வன், நித்யா மேனன், ரித்து வர்மா கூட்டணியில் உருவாகும் தெலுங்கு திரைப்படம்!

அசோக் செல்வன், நித்யா மேனன், ரித்து வர்மா கூட்டணியில் உருவாகும் தெலுங்கு திரைப்படம்!

நடிகர் அசோக் செல்வன் தெலுங்கில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அனி சசி என்பவர் இயக்கத்தில் அசோக் செல்வன், நித்யா மேனன் மற்றும் ரிது வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் ‘நின்னிலா நின்னிலா’ என்ற படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Image

ஸ்ரீ வெங்கடேஸ்வர சினி சித்ரா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். பொழுதுபோக்கு நிறைந்த ஒரு தட்டு உங்களுக்காக காத்திருக்கிறது என்று படக்குழு பதிவிட்டுள்ளனர்.

போஸ்டரில் அசோக் செல்வன், நித்யா மேனன், ரித்து வர்மா ஆகியோரது தலைகள் மட்டும் தட்டில் வைக்கப்பட்டிருப்பது போன்று வேடிக்கையாக உள்ளது.

அசோக் செல்வன் கடைசியாக நடித்த ஓ மை கடவுளே படம் எதிர்ப்பாராத வெற்றி அடைந்தது. ரித்து வர்மா கடைசியாக நடித்து வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படமும் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share this story