காதலர் தினத்திற்கு ரெண்டு காதலுடன் வரும் விஜய் சேதுபதி!

காதலர் தினத்திற்கு ரெண்டு காதலுடன் வரும் விஜய் சேதுபதி!

காதலர் தினத்தன்று ‘காத்துல வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக ‘காத்து வாக்குல ரெண்டு காதல்‘ படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இந்தப் படத்தில் சமந்தாவும் கூடுதலாக இணைந்துள்ளார். இந்தப் படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.

Image

தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் ‘2 காதல்’ பாடல் வரும் காதலர் தினத்தன்று(பிப்ரவரி 14) வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். அந்தப் பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

விஜய் சேதுபதியுடன், இரண்டு முக்கிய ஹீரோயின்களாக நயன்தாரா மற்றும் சமந்தா சேர்ந்து நடித்திருப்பதால் படத்திற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Share this story