பாம்பைக் கையில் பிடித்த விவகாரம்… ஈஸ்வரன் படக்குழுவைப் பாராட்டிய வனத்துறை அதிகாரிகள்!

பாம்பைக் கையில் பிடித்த விவகாரம்… ஈஸ்வரன் படக்குழுவைப் பாராட்டிய வனத்துறை அதிகாரிகள்!

சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு தற்போது பாண்டிசேரியில் நடந்து வரும் மாநாடு படப்பிடிப்பில் கலந்து வருகிறார். தொடர்ந்து அப்டேட்கள் வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகத்தில் திளைக்க வைத்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு ஈஸ்வரன் படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு ஒரு பாம்பை கையில் பிடித்து சாக்குப்பைக்குள் போடும் வீடியோ வெளியாகி வைரலாகியது. அதையடுத்து, வன விலங்குகளை துன்புறுத்துவதாக வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பான புகாரில் கிண்டி வனத்துறை அதிகாரிகள் ஈஸ்வரன் படக்குழுவினரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

அதையடுத்து அந்தக் காட்சியில் இடம் பெற்றது போலி பிளாஸ்டிக் பாம்பு தான், கம்பியூட்டர் கிராபிக்ஸ் செய்யும் போது காட்சிகள் கசிந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

பாம்பைக் கையில் பிடித்த விவகாரம்… ஈஸ்வரன் படக்குழுவைப் பாராட்டிய வனத்துறை அதிகாரிகள்!

தற்போது ஈஸ்வரன் படக்குழு தங்கள் தரப்பிலிருந்து அந்தக் காட்சி குறித்த புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வனத்துறை அதிகாரிகள் முன் சமர்ப்பித்துள்ளனர். அதைப் பார்த்த வனத்துறை அதிகாரிகள் அந்தக் காட்சியில் பயன்படுத்தப்பட்டது போலி பாம்பு தான் என்று உறுதி செய்தனர். மேலும் பாம்பை உயிருள்ளது போல தத்துரூபமாக சித்தரித்தற்காக படக்குழுவைப் பாராட்டியுள்ளனர். தற்போது ஈஸ்வரன் படத்தின் மீது இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share this story