நான்கு இயக்குனர்கள்… நான்கு கதைகள்…. பாவக் கதைகள்… பார்க்கலாமா வேணாமா..!?

நான்கு இயக்குனர்கள்… நான்கு கதைகள்…. பாவக் கதைகள்… பார்க்கலாமா வேணாமா..!?

பாவக் கதைகள் -1 ‘தங்கம்’… மனசு கனக்கிறது!

‘பாவக்கதைகள்’, வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் என நான்கு சென்சேஷனல் இயக்குனர்கள் சேர்ந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் இது. நான்கு கதை,வெவ்வேறு கதைக்களம் என்றாலும் ‘சாதி வெறி, ஆணவக்கொலை’ என ஒரு மையப்புள்ளியில் பயணிக்கிற படமாக இருக்கிறது. இப்படியொரு கதைக்களத்தை எடுக்க முன் வந்த தயாரிப்பாளரையும், வெளியிட்ட நெட் ஃப்ளிக்ஸ் இருவரையும் பாராட்டலாம்.

நான்கு இயக்குனர்கள்… நான்கு கதைகள்…. பாவக் கதைகள்… பார்க்கலாமா வேணாமா..!?

கதை நடக்கும் காலம் எண்பதுகளின் தொடக்கம் என்பதை முன் கூட்டியே சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.உடலில் ஏற்படும் குறைபாடு காரணமாக மூன்றாம் பாலினமாக தன்னை உணர்ந்து கொண்டு முழுமையாக தன்னை பெண்ணாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கிற ஒரு ஜீவன்,சுற்றிலும் உள்ள உறவுகளாலும் அடாவடி செய்யும் இளைஞர்களாலும் எப்படியெல்லாம் துயரத்தைச் சந்திக்க நேர்கிறது… என்பதைச் சொல்வதற்கு மதம் கடந்து திருமணம் செய்துகொள்ளும் காதல் ஜோடியை மய்யமாக வைத்து அழுத்தமாகக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.

இப்போதுள்ள காலகட்டத்தில் மூன்றாம் பாலினம் குறித்து எல்லோரும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.அதிலும் விதிவிலக்கும் உண்டு என்றாலும், அங்கீகாரம், வேலைவாய்ப்பு என காலம் முன்னேறிக்கொண்டிருக்கிறது. அதற்காகவே நான்பதாண்டுகளுக்கு முன் நடைப்பதாக கதை களத்தை அமைத்திருக்கிறார். அப்போதெல்லாம் ஜாதி விட்டு,மதம் விட்டுத் திருமணம் செய்துண்டாலும் சமாதானமாகி ஏற்றுக்கொள்பவர்களும் உண்டு என்பதையும் மறக்காமல் நினைவு படுத்தியிருக்கிறார் இயக்குனர்.மிகவும் நுட்பமான பதிவு.

நான்கு இயக்குனர்கள்… நான்கு கதைகள்…. பாவக் கதைகள்… பார்க்கலாமா வேணாமா..!?

பொதுவாக தமிழ் சினிமாவில் பெண்களின் கதாபாத்திரங்களைக் கையாளுவதில் இப்போதுள்ள இயக்குனர்களில், பல ஆண் இயக்குனர்கள் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை ; சில இயக்குனர்களைத் தவிர!
சுதா கொங்கரா படங்களில் பெண் கதாபாத்திரங்கள் மக்களால் வெகுவாக பாராட்டிப் பேசப்படும்படி இருக்கும். இந்தக் கதையில் ஆண் பெண் இரண்டும் கலந்த திருநங்கை கதாபாத்திரத்தை எங்கும் அடிபிறழாமல் காளிதாஸ் ஜெயராம் மூலம் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். வளர்ந்து வரும் இளம் கதாநாயகனான காளிதாஸ் , சாந்தணு இருவரும் போட்டி போட்டுகொண்டு தங்கள் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ‘ஏன் பொம்பள மாதிரி பண்ற அப்படின்னு கேட்கிறீர்களே.. நீ ஏன் ஆம்பள மாதிரி பண்ற அப்படின்னு என்னைக்காவது அவன் கேட்டு இருக்கானா?’ என்று ஷாந்தணு கேட்குமிடம் ‘பொளேர்’ என்று முகத்தில் அறைகிறது. ஊரே ஒதுக்கி வைத்து தீண்டத்தகாத ஒரு ஜந்துவைப் போல் நடத்தும் போது, காதலியை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டு ஓடிப்போகும் போது காளிதாஸைக் கட்டிப்பிடித்து நன்றி சொல்லி விடை பெறுகிறார் சாந்தணு. அப்போது குலுங்கி அழுதபடி ‘எல்லாரும் என்னைக் கிட்ட சேத்துக்க மாட்டேங்கிறாங்க… நீ மட்டும்தான் தங்கம் கட்டிப்பிடிச்சு இப்படியொரு அன்பைக்காட்டியிருக்க…’ என்று சொல்லுமிடத்தில் திருநங்கைகளின் மொத்த வலியையும் சொல்ல அந்த ஒரு காட்சி போதும்.

நான்கு இயக்குனர்கள்… நான்கு கதைகள்…. பாவக் கதைகள்… பார்க்கலாமா வேணாமா..!?

உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தன் தம்பியை எந்த சகோதரியாவது ‘நீ செத்திரு சத்தாரு’ என்று கதவுக்கு பின்னால் நின்று சொல்ல முடியுமா..! ஒரு குடும்பத்தில் யாரோ ஒருவர் மூன்றாம் பாலினம் என்று அறிந்துகொண்டால் மொத்தக் குடும்பத்தையும் இந்த சமூகம் எவ்வளவு தூரத்துக்கு துரத்துகிறது என்பற்கு அந்தக் காட்சி ஒன்றே போதும்! அரை மணி நேரப் படம் என்றாலும் படம் முடியும் போது மனசு கனக்கிறது!

பாவக் கதைகள்-2 ‘ லவ் பண்ணா விட்டுடணும்’… தெலுங்கு மசாலா.!

நான்கு இயக்குனர்கள்… நான்கு கதைகள்…. பாவக் கதைகள்… பார்க்கலாமா வேணாமா..!?

சுதா கொங்கராவின் கதைக்களம் கோபி செட்டிப்பாளையம் பக்கம் என்றால் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட களம் நார்த் இந்தியாவாக இருக்கிறது. உள்ளூராக இருந்தால் ஏதாவது ஒரு ஜாதிய தலைவரை ஞாபகப்படுத்தும் ஆபத்தும் இருக்கு என்பதால் இந்த முடிவுக்கு வந்திருக்கக்கூடும்.சரி போகட்டும் இதுவும் காதல் கதைதான். சமத்துவம், ஜாதி மறுப்பு என ஊருக்கே உதாரணமாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு ஜாதிக்காட்சி தலைவர்,எந்த சூழலிலும் தன் ஜாதிக்கோ, ஜாதி பெண்களுக்கோ ‘களங்கம்’ வந்துவிடாமல் அதை எப்படியெல்லாம் சுய லாபத்திற்காக பயன் படுத்திக் கொள்வார்கள் என்பதுதான் கதை.

நான்கு இயக்குனர்கள்… நான்கு கதைகள்…. பாவக் கதைகள்… பார்க்கலாமா வேணாமா..!?

சொந்த மக்களுக்கே காதல் என்று வரும்போது என்ன செய்கிறார்.அவரே விரும்பினாலும் இந்த ஜாதிப் பின்னணி எவ்வளவு சிக்கலாக வலை பின்னியிருக்கிறது என்பதை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அஞ்சலிக்கு அப்பாவியான கிராமத்துப் பெண், அல்ட்ரா மாடன் கேரக்டர் என்று டபுள் ஆக்ட் கொடுத்திருக்கிறார். எதுவும் மனதில் ஒட்டாத காட்சியமைப்புகள், இந்தி, தெலுங்கு முகங்கள் என படு பக்காவான தெலுங்கு கமெர்ஷியல் படம் பார்க்கிற மாதிரியே மொத்தப்படமும் இருக்கு. OOT ஃபிளாட் பாமில் ரிலீஸ் ஆகிற படம் என்பதற்காகவே அஞ்சலியை அரைகுறையாக காட்டியிருப்பதெல்லம் … சாரி, கொஞ்சம் ஓவர். க்ளைமாக்சில் காட்சியமைப்பை நம்ப வைப்பதற்கு அது பயன்படும் என்று ‘ஸீன்’ வைத்திருப்பார் போல! அஞ்சலிக்கும் ஹெல்ப் பண்ணல ;படத்துக்கும்.முழுக்க காமெடி படம் பார்க்கிற மனநிலையோடு பார்த்தால் ஒரு வேளை பிடிக்குமோ என்னவோ…

நான்கு இயக்குனர்கள்… நான்கு கதைகள்…. பாவக் கதைகள்… பார்க்கலாமா வேணாமா..!?

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக ஓரினசேர்க்கையாளர்கள் காமெடியாகவே காட்டப்படுகின்றனர். கோவா, இருட்டு-அறையில்-முரட்டு-குத்து, போன்ற திரைப்படங்கள் அதற்கு உதாரணம். இந்த திரைப்படத்தில் அது சற்று சீரியஸாக காட்டப்படும் என்று எண்ணியிருந்த நிலையில், மீண்டும் அது ஒரு காமெடியாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெண்களின்‌ பிரச்சனைகளை இந்த கதை பேசும் என்று எண்ணியிருந்த நிலையில், பெண்களை இழிவுபடுத்தும் ஒரு கெட்ட வார்த்தை கொண்டு படம் முடிகிறது.

பாவக்கதைகள்-3 ‘ வான்மகள்’… வேறொரு கோணம்!

நான்கு இயக்குனர்கள்… நான்கு கதைகள்…. பாவக் கதைகள்… பார்க்கலாமா வேணாமா..!?

கௌதம் மேனனால் இத்தகைய சிறப்பான ஒரு கிராமத்துப் படத்தை இயக்கி நடிக்க முடியும் என்பது மக்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பாத்திரங்களின் நடிப்பும் கச்சிதமாக அமைந்துள்ளது. சில இடங்களில் வழக்கமான கௌதம் மேனனின் வசனங்கள் தெரிந்தாலும் அடுத்தடுத்த ஸீன்கள் அதைக் கடக்கச் செய்கின்றன. அவ்வப்போது பாபநாசம் திரைப்படத்தையும் நமக்கு ஞாபகப்படுத்துகிறது. வானத்தில் உயரப் பறக்க நினைக்கிறார் பொன்னுத்தாயி. ஆனால், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவள் சிறகு ஒடிக்கப்பட்டு தன் வீட்டு அறை கதவுகளுக்குள் அடைக்கப்படுகிறாள். அவள் மீண்டும் வெளியே பறக்க நினைக்கும்போது தன் தாய் தந்தையின் உணர்வு என்னவாக இருந்தது, என்னவாக இருக்க வேண்டும் என்பதை பிரதிபலிக்கிறது இந்த படம்.

நான்கு இயக்குனர்கள்… நான்கு கதைகள்…. பாவக் கதைகள்… பார்க்கலாமா வேணாமா..!?

முக்கியமாக குடும்பத்தில் ஒரு பெண்ணின் முடிவு அந்தக் குடும்பத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கௌதம் மேனன் இக் கதையில் உலகுக்கு உணர்த்திஇருக்கிறார். வெற்றிமாறன், சுதா கொங்கராவின் கதைகள் எதார்த்தம் மட்டுமே கொண்டவை. கௌதம் மேனனின் கதை அதை தாண்டி மனிதன் எவ்வாறு அந்த பிரச்சினையை அணுக வேண்டும் என்பதை காட்டியிருக்கிறது. தங்கையின் அண்ணன், கத்தியை வைத்து செய்யும் செயல் மட்டும் நெருடலை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு மக்களே தண்டனை அளிப்பது ஏற்கத்தக்கதல்ல. அது சட்டத்தின் கையிலே சென்றடைய வேண்டும். சாதி, மத பெருமை ஒரு பெண்ணின் கருப்பையில் இருக்கிறது என்பதையும், நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க என்பதையும் உடைத்தெறிந்திருக்கிறது இந்தப் படம் ;பாராட்டுக்கள்.

பாவக்கதைகள்-4 ‘ஓர் இரவு’… நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணியிருக்கிறார்.

நான்கு இயக்குனர்கள்… நான்கு கதைகள்…. பாவக் கதைகள்… பார்க்கலாமா வேணாமா..!?

அடைக்கப்பட்ட கதவுக்குள் தவித்துக் கொண்டிருக்கும் மகளுக்கும், கதவை அடைத்த தந்தைக்கும் இடையேயான சாதியா? பாசமா? என்ற போராட்டமே ஓரிரவு. பிரகாஷ்ராஜின் நடிப்பு இந்தக் கதையில் மிகவும் பாராட்டுக்குரியது. அம்பியாக நடித்து பின் அந்நியனாக மாறி நடிக்கும் விக்ரமை “பின்ரியேடா” என்று பாராட்டுவார் பிரகாஷ்ராஜ். இந்தக்கதையில் அம்பி போல் நடித்தும் பின் அந்நியன் போல் மாறும் நேரங்களிலும் நாமும் ‘பின்றீங்களே… செல்லம்’ என்று சொல்லவைத்திருக்கிறார். அப்படியோரு நடிப்பு. ‘பிரதான தியேட்டர் சினிமாக்களில் சென்சார்போர்டு இருப்பதால் தன்னால் நினைத்ததை பேச முடியவில்லை, ஆனால், OOT-களில் எனக்கு அந்த சுதந்திரம் இருக்கிறது’ என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் வெற்றிமாறன்.. ஆனால், இந்தப்படத்தில் ஓப்பனாக எதையும் பேசியது போல் தெரியவில்லை! மீண்டும் ஒரு யதார்த்த சாதி ஆணவக் படுகொலை திரைப்படமே ஆகும். எதிர்பாராத திருப்பங்கள் எதுவும் இல்லாமல் எதிர்பார்த்தது போலவே முடிகிறது திரைப்படம்.

நான்கு இயக்குனர்கள்… நான்கு கதைகள்…. பாவக் கதைகள்… பார்க்கலாமா வேணாமா..!?

உடுமலைப்பேட்டை சங்கர் (கௌசல்யா) கொலை வழக்கும் அதன் பின்னணியும் ஊருக்கே தெரியும்.அந்தக் கொலை பட்டப்பகலில் நடந்தபோது வெளியான சி.சி.டி காட்சிகள் வெளியாகி பார்த்தவர் அத்தனை பேரையும் பதறவைத்த சம்பவம் வரலாற்றின் மிகப் பெரிய கறை. இதுபோன்ற பல்வேறு கொடூர ஆணவக்கொலைகள் சாதிய வன்மம்கள் ஆகியவற்றைப் பற்றி வெற்றிமாறன் பேசி இருக்கலாம். ஆனால், அப்படி எதையுமே இதில் பேசாதது ஏமாற்றத்தைத் தருகிறது.அதற்கான ஸ்பேஸ் இருந்தும் இயக்குனர் கோட்டை விட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.

இந்த நான்கு திரைப்படங்களிளும் ‘பூட்டிய கதவுகள்’ என்ற ஒற்றுமையைத் தாண்டி வேறு இரு ஒற்றுமைகளும் இருக்கிறது. ‘கிராமமும், சாதியும்’. இந்த இரண்டுமே, இந்த நான்கு படங்களுக்கும் இரு பிரச்சனைகளை உருவாக்கியிருக்கிறது.

  1. நான்கு திரைப்படங்களிலும் ஏற்படும் சாதிய மத பிரச்சனைகளும் கிராம வாழ்க்கையில் நடப்பது போலவே காட்டப்பட்டிருக்கின்றன. இத்தகைய போக்கு கிராமங்களில் மட்டுமே சாதிய வாதிகளும் ஆணவக்கொலைகாரர்களும் இருக்கிறார்கள் என்பது போலவும், கிராமங்களை கண்டு அஞ்சும் நிலைமையையும் ஏற்படுத்தும்.
  2. நகரங்களைக் காட்டிலும் கிராமத்தில்தான் சாதி ஆதிக்கமும் ஆணவமும் அதிகமாக இருக்கிறது என்பதனை இந்த திரைப்படம் பேசினாலும், நெட் ஃபிலிக்ஸ் போன்ற OOT தளங்களில் இத்திரைப்படங்கள் வெளியிடப்படுவதால். OOT திரைப்படங்கள் தியேட்டர்கள் அளவிற்கு கிராம மக்களிடம் எந்தளவுக்கு சென்று சேரும் என்பதனையும் எண்ணிப் பார்க்க வேண்டும். எனினும் இது போன்ற சாதிமத சமூகப் பிரச்சினைகளைப் பேசும் திரைப்படங்கள் எந்தத் தளத்தில் வெளியாகினாலும் அதில் அவை வரவேற்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது!
  • சி.பிரபாகரன்

Share this story