2400 பேருக்கு இலவச வீடு… நெகிழ வைத்த மணிரத்னம்.!?

2400 பேருக்கு இலவச வீடு… நெகிழ வைத்த மணிரத்னம்.!?

கொரோனா பாதிப்பால் கடந்த ஒன்பது மாதங்களாக சினிமா படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் சூர்யாதொடங்கி பல முன்னணி ஹீரோக்கள் தயாரிப்பாளர்கள் பலரும் பெப்ஸி தொழிலாளர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார்கள். ஓரளவுக்கு அது உதவிகரமாக இருந்தது என்றாலும் பல தொழிலாளர்கள் இன்னும் சிரமத்தில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக நெட் ஃபிலிக்ஸ் OOT தளத்திற்காக மணிரத்தினம் ‘நவராசா’ என்று ஒரு படம் தயாரிக்கிறார்.

2400 பேருக்கு இலவச வீடு… நெகிழ வைத்த மணிரத்னம்.!?

இதில்,சூர்யா, சித்தார்த், விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரேவதி, ஐஸ்வர்யா ராஜேஷ், நித்யா மேனன், பூர்ணா,அசோக் செல்வன், என எல்லாமே மார்க்கெட்டில் பிஸியான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். தவிர, மணிரத்னம், கௌதம் மேனன், பொன்ராம், கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், கேவிஆனந்த், ஹலிதா ஷமீம் என இயக்குகிற அத்தனை இயக்குனர்களும் முன்னணி இயக்குனர்களே. இதில் ஆச்சர்யமான தகவல் என்னன்னா… இதில் ஒர்க் பண்ற யாருக்குமே சம்பளம் கிடையாது என்பதுதான்!

2400 பேருக்கு இலவச வீடு… நெகிழ வைத்த மணிரத்னம்.!?

படத்தின் தலைப்புக்கு ஏற்ப ஒன்பது விதமான உணர்ச்சிகளைச் சொல்லும் இந்தப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் விரைவில் OTT -யில் ரிலீஸ் ஆக விருக்கிறது. இந்தப் படம் இதுவரை இல்லாத அளவுக்கு 200 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்திருக்கிறார்கள் .இந்த 200 கோடியோடு தமிழக அரசும் மானியமாக பல கோடிகளைக் கொடுக்க விருக்கிறது. இரண்டையும் சேர்த்து அரசு ஏற்கனவே இலவசமாகக் கொடுத்த பையனூர் ஏரியாவில் 2400 வீடுகள் கட்டி, பெப்ஸியில் அங்கம் வகிக்கும் எல்லா சங்கங்களிலிருந்தும் தகுதியான உறுப்பினர்களுக்கு வீட்டை இலவசமாக கொடுக்கப் போகிறார்கள். மணி ரத்தினம் எடுத்த இந்த முயற்சிக்கு கோடம்பாக்கம் ஏரியாவில் பாராட்டுக்கள் ஒரு பக்கம் என்றாலும், யார் யாருக்கு வீடு கொடுப்பது என்பதில் கொஞ்சம் குழப்படி சத்தமும் கேட்பதாகச் சொல்கிறார்கள். சங்கம்னா… இது கூட இல்லேன்னா எப்படி!?

Share this story