மாரி இயக்குனருடன் மீண்டும் கை கோர்க்கும் தனுஷ்!

மாரி இயக்குனருடன் மீண்டும் கை கோர்க்கும் தனுஷ்!

நடிகர் தனுஷ் மீண்டும் மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் தற்போது கர்ணன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை வெளியானதிலே மிகப்பெரிய ஓப்பனிங் பெற்றுள்ள தனுஷ் படம் கர்ணன் தான் என்று கூறப்படுகிறது.

மாரி இயக்குனருடன் மீண்டும் கை கோர்க்கும் தனுஷ்!

தனுஷ் தற்போது தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருக்கிறார். இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் மீண்டும் இணைய இருக்கிறார். பின்னர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார்.

மாரி இயக்குனருடன் மீண்டும் கை கோர்க்கும் தனுஷ்!

தற்போது தனுஷ், மாரி படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மாரி படம் ஹிட் ஆனதை அடுத்து இந்தக் கூட்டணி மாரி 2 படத்திற்காக மீண்டும் இணைந்தனர். ஆனால் மாரி 2 பாக்ஸ் ஆபிசில் தோல்வியைத் தழுவியது.

தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி ஒரு புதிய படத்திற்காக இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

Share this story