‘வொண்டர் வுமன் 1984’ வெளியீட்டுத் தேதி உறுதியானது!

‘வொண்டர் வுமன் 1984’ வெளியீட்டுத் தேதி உறுதியானது!

பிரபல ஹாலிவுட் திரைப்படமான வொண்டர் வுமன் 1984 திரைப்படம் வெளியீட்டுத் உறுதியானது.

பிரபல ஹாலிவுட் நடிகை கால் கடோட் நடிப்பில் வெளியான வொண்டர் வுமன் திரைப்படம் உலகம் முழுதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வொண்டர் வுமன் 1984 என்ற பெயரில் உருவாகியுள்ளது.

‘வொண்டர் வுமன் 1984’ வெளியீட்டுத் தேதி உறுதியானது!

கொரோனாவுக்கு முன்னரே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் லாக்டவுனால் வெளிவரமுடியாமல் முடங்கியது. பின்னர் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. மறுபடியும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது வொண்டர் வுமன் 1984 படத்தின் வெளியீட்டுத் தேதி உறுதியாகியுள்ளது. டிசம்பர் 25ம் தேதி இப்படம் உலகம் முழுக்க தியேட்டரில் வெளியாகிறது. மேலும் HBO Max தளத்திலும் அதே நாளில் இப்படம் வெளியாகிறது.

இந்த அறிவிப்பை அடுத்து வொண்டர் வுமன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்.

நேரம் வந்துவிட்டது. இதுவரை நாம் அனைவரும் நீண்ட காலம் காத்திருந்துவிட்டோம். இந்தத் திரைப்படத்தை நீங்கள் அனைவரும் பார்க்க நான் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறேன் என்பதைச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.

இது ஒரு சுலபமான முடிவு அல்ல, படத்தின் ரிலீஸ் இவ்வளவு காலம் தள்ளிப்போகும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் கொரோனா எதிர்பாராத விதமாக உலகத்தை உலுக்கியிள்ளது. வொண்டர் வுமன் 1984 எனக்கு ஒரு சிறப்பு, அது உங்களுக்கும் சிறப்பு என்று நான் நம்புகிறேன். நாங்கள் எங்கள் இதயங்களையும் ஆன்மாவையும் அதில் வைத்துள்ளோம்.
எனவே .. நீங்கள் அதை தியேட்டர்களில் பார்க்கலாம். மேலும் அதை உங்கள் வீடுகளில் இருந்து கொண்டே HBOMAX-லும் பார்க்கலாம்.” என்று நடிகை கால் கடோட் தெரிவித்துள்ளார்

Share this story