யோகிபாபு நொறுக்கிட்டாரு… ‘மண்டேலா’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய கவுதம் மேனன்!

யோகிபாபு நொறுக்கிட்டாரு… ‘மண்டேலா’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய கவுதம் மேனன்!

யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள மண்டேலா திரைப்படத்தை இயக்குனர் கவிதம் வாசுதேவ் மேனன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

யோகிபாபு நடிப்பில் மண்டேலா திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை மடோன் அஸ்வின் என்பவர் இயக்கியிருந்தார். தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் கள எதார்த்தத்தை பொட்டில் அறைந்தாற் போல் காமெடியுடன் எடுத்துக்கூறியுள்ளது இந்தப் படம். தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் இந்தப் படம் வெளியானதால் படத்திற்கு மேலும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

யோகிபாபு நொறுக்கிட்டாரு… ‘மண்டேலா’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய கவுதம் மேனன்!

இந்தப் படம் சில தினங்களுக்கு முன்பு நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பானது. தற்போது நெட்பிளிக்ஸ் தளத்திலும் ஸ்ட்ரீம் ஆகிறது. தற்போது இந்தப் படத்தைப் பார்த்துள்ள இயக்குனர் கவுதம் மேனன், இந்தப் படத்தைப் பாராட்டி தள்ளியுள்ளார்.

“என்ன ஒரு அருமையான, நகைச்சுவையான, புத்திசாலித்தனமான படம். மண்டேலா. படக்குழுவிற்கு பெரிய கைதட்டல். யோகிபாபு நொறுக்கிவிட்டார். அவருடன் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். ஷீலா ராஜ்குமார் மற்றும் மீதமுள்ள அற்புதமான நடிகர்களுக்கு சிறப்பு குறிப்பிடுகிறேன். பாரத் சங்கரின் இசை மற்றும் விதுவின் காட்சிஎ அமைப்புகளை மிகவும் நேசித்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story