கில்லி பட நடிகர் கொரோனவால் உயிரிழப்பு!

கில்லி பட நடிகர் கொரோனவால் உயிரிழப்பு!

‘கில்லி’ படத்தில் ஆதிவாசி கதாபாத்திரத்தில் நடித்த மாறன் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48.

விஜய் நடிப்பில் வெளியான கில்லி, குருவி ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார் மாறன். இவர் டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார் . நடிகராக வலம் வந்த இவர் கானா பாடகரும் கூட.

கில்லி பட நடிகர் கொரோனவால் உயிரிழப்பு!

செங்கல்பட்டு பகுதியில் வசித்து வந்த இவர் கொரோனா பாதிக்கப்பட்டதை அடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு மாறன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தான் நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மறைந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story