பிரதமர் வருகையால் கோபமடைந்த களவாணி பட ஹீரோயின்… டிரெண்டாகும் #GoBackModi

பிரதமர் வருகையால் கோபமடைந்த களவாணி பட ஹீரோயின்… டிரெண்டாகும் #GoBackModi

பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு நடிகை ஓவியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. விமானப்படை விமானம் மூலம் டெல்லியிலிருந்து காலை 10.35 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். பிரதமரை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

பிரதமர் வருகையால் கோபமடைந்த களவாணி பட ஹீரோயின்… டிரெண்டாகும் #GoBackModi

பின்னர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், விரிவுபடுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட அர்ஜூன் ரக பீரங்கியை நாட்டிற்காக அர்ப்பணிக்கிறார். மேலும் புதிய ரயில் தட பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் பிரதமரின் சென்னை வருகைக்கு நடிகை ஓவியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளமாக ட்விட்டரில் #GoBackModi என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் இதுபோன்று #GoBackModi ஹேஷ்டேக் டிரெண்டாவது குறிப்பிடத்தக்கது.

Share this story