மற்ற நாடுகளை ஒரு வாரம் முன்பே இந்தியாவில் வெளியாகும் ‘காட்ஸில்லா Vs காங்’!

மற்ற நாடுகளை ஒரு வாரம் முன்பே இந்தியாவில் வெளியாகும் ‘காட்ஸில்லா Vs காங்’!

‘காட்ஸில்லா Vs காங்’ ஹாலிவுட் திரைப்படம் மற்ற நாடுகளை விட ஒரு வாரம் முன்பாகவே இந்தியாவில் வெளியாகவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு எந்தளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவிற்கு மான்ஸ்டர் வகை படங்களுக்கும் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் கிங் காங் திரைப்படம் உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதே மான்ஸ்டர் வகையில் வெளியான காட்ஸில்லா திரைப்படமும் பிளாக் பஸ்டர் ஹிட் தான்.

மற்ற நாடுகளை ஒரு வாரம் முன்பே இந்தியாவில் வெளியாகும் ‘காட்ஸில்லா Vs காங்’!

இரண்டும் தனித்தனியாக வெளியாக அமோக வரவேற்பு பெற்றதை அடுத்து தற்போது இரண்டு மான்ஸ்டர்களையும் ஒரே படத்தில் இணைத்துள்ளனர். இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

காட்ஸில்லா Vs காங் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உலக ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தை லெஜண்ட்ரி நிறுவனத்துடன் இணைந்து வார்னர் ப்ரதர்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

உலகத்தையே அழிக்க நினைக்கும் காட்ஸில்லாவை, உலகத்தால் அழிக்கப்பட நினைத்த கிங் காங் எப்படி காப்பாற்றப் போகிறது என்பது தான் படத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளிலும், HBO Max தொலைக்காட்சி சேனலிலும் வெளியாக உள்ளது. ஆனால் இந்தியாவில் ஒரு வாரம் முன்பே அதாவது மார்ச் 26-ம் தேதியே வெளியாகவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share this story