ஹாலிவுட்டில் சர்ச்சையான விவகாரம். ‘கோல்டன் குளோப்’ விருதுகளை திருப்பிக் அனுப்பிய டாம் க்ரூஸ்.

ஹாலிவுட்டில் சர்ச்சையான விவகாரம். ‘கோல்டன் குளோப்’ விருதுகளை திருப்பிக் அனுப்பிய டாம் க்ரூஸ்.

கருப்பின சர்ச்சை விவகாரத்தில் தனது அளிக்கப்பட்ட ‘கோல்டன் குளோப்’ விருதுகளை திருப்பி அனுப்பி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகர் டாப் க்ரூஸ்.

ஹாலிவுட்டில் சர்ச்சையான விவகாரம். ‘கோல்டன் குளோப்’ விருதுகளை திருப்பிக் அனுப்பிய டாம் க்ரூஸ்.

ஹாலிவுட்டில் ஆஸ்கருக்கு இணையாக திரைப்பிரபலங்களுக்கு கொடுக்கப்படும் விருதுகள் ‘கோல்டன் குளோப்’. இந்த விருதை ஃபாரின் ப்ரெஸ் அசோசியேஷன் என்கிற அமைப்பு ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. உலகில் அளவில் உள்ள சிறந்த கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

ஹாலிவுட்டில் சர்ச்சையான விவகாரம். ‘கோல்டன் குளோப்’ விருதுகளை திருப்பிக் அனுப்பிய டாம் க்ரூஸ்.
77th ANNUAL GOLDEN GLOBE AWARDS — Pictured: Jesse Armstrong accepts the award for Best TV Series, Drama for “Succession” at the 77th Annual Golden Globe Awards held at the Beverly Hilton Hotel on January 5, 2020 — (Photo by: Paul Drinkwater/NBC)

இந்த விருது வழங்கும் அமைப்பில் பொழுதுப்போக்கு பத்திரிகையாளர்கள், புகைப்படப் பத்திரிகையாளர்கள் என 90 பேர் வெள்ளை நிறத்தவர்களே உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். கடந்த 19 வருடங்களில் ஒரு கருப்பினத்தவர் கூட உறுப்பினராக இல்லை. இந்த அமைப்பில் வெள்ளை நிறத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், இவர்கள் நிறவெறி குறித்து சர்ச்சைக் கருத்துகளைக் கூறிவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

ஹாலிவுட்டில் சர்ச்சையான விவகாரம். ‘கோல்டன் குளோப்’ விருதுகளை திருப்பிக் அனுப்பிய டாம் க்ரூஸ்.

தற்போது இந்த செய்தி லாஸ் ஏஞ்சல்ஸ் பத்திரிகைகளில் வெளியாகி சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனால் அந்த அமைப்பின் செயல்பாட்டைக் கண்டித்து அமேசான், நெட்ஃபிளிக்ஸ், வார்னர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ஹாலிவுட் நட்சத்திரங்களும் அந்த அமைப்புக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் 1989, 1996, 1999 வருடங்களில் தான் வென்ற மூன்று கோல்டன் குளோப் விருதுகளை நடிகர் டாம் க்ரூஸ் திருப்பிக் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து மற்ற ஹாலிவுட் பிரபலங்களும் திருப்பி தரப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த பிரச்சனையால் ஹாலிவுட்டில் பெரிய சர்ச்சையே வெடித்துள்ளது.

Share this story