கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா…சிறந்த நடிகராக மறைந்த ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் தேர்வு…

கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா…சிறந்த நடிகராக மறைந்த ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் தேர்வு…

கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகராக மறைந்த ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா…சிறந்த நடிகராக மறைந்த ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் தேர்வு…

ஆஸ்கார் விருதுக்கு இணையாக திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருது ‘கோல்டன் ‌குளோப்’. ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.வழக்கமான டிசம்பர் மாதம் நடைபெறும் இந்த விழா இந்த ஆண்டு கொரானா பிரச்சினை காரணமாக இரண்டு மாதங்கள் கழித்து நடைபெறுகிறது.

கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா…சிறந்த நடிகராக மறைந்த ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் தேர்வு…

அதன்படி 78-வது கோல்டன் குளோப் விருதுகள் கலிப்போர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்றது. உலகின் சிறந்த திரை கலைஞரை கவுரவிக்க நடிகர், நடிகை, இயக்குனர், சிறந்த திரைப்படம் என பல பிரிகளில் வழங்கப்பட்டது.

கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா…சிறந்த நடிகராக மறைந்த ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் தேர்வு…

இதில் சிறந்த நடிகராக ‘மா ரெய்னிஸ் பிளாக் பாட்டம்’ படத்தில் நடித்த மறைந்த சாட்விக் போஸ்மேனுக்கு வழங்கப்பட்டது.இதேபோன்று ‘தி யுனைடட் ஸ்டேட்ஸ் வெர்சஸ் பில்லீ ஹாலிடே’ படத்தில் நடித்த ஆண்ட்ராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.தொடர்ந்து சிறந்த திரைப்படத்திற்கான விருது ‘நோ மேட்லேண்ட்’ படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.இதே படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருது க்ளோ ஜாவோவுக்கு கொடுக்கப்பட்டது. இதில் ‘மினாரி’ படத்திற்கு சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருது கிடைத்துள்ளது.

கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா…சிறந்த நடிகராக மறைந்த ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் தேர்வு…

இந்த விருது வழங்கும் விழாவில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’, தனுஷின் ‘அசுரன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மொழிப்படங்கள் பட்டியலில் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story