அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் நடிக்கும் ஜெயம் படம் வில்லன்!?

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் நடிக்கும் ஜெயம் படம் வில்லன்!?

அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் கோபிசந்த் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மலையாளத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். இப்படத்தை சூர்யா தேவர நாகவம்சி தயாரிக்க உள்ளார்.

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் நடிக்கும் ஜெயம் படம் வில்லன்!?

பிஜு மேனன் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளார். பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் முதலில் ராணா நடிக்கவிருந்தார். பின்னர் அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் நடிக்கும் ஜெயம் படம் வில்லன்!?

தற்போது கன்னட நடிகர் கோபிசந்த் அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் தமிழில் ‘ஜெயம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

கோபிசந்த் உடல் அளவிலும் பிரித்விராஜ் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகத் தான் இருப்பார். கோபிசந்தும் இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story