கௌதம் கார்த்திக் படத்தின் டைட்டில் அறிவிப்பு… நாளை வெளியாகிறது மோஷன் டீசர்…

கௌதம் கார்த்திக்  படத்தின் டைட்டில் அறிவிப்பு… நாளை வெளியாகிறது மோஷன் டீசர்…

கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் எழில் உருவாக்கி வரும் படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்து வருகிறார். இயக்குனர் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாத இப்படத்தை காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் விஜய்குமரன் தயாரித்து வருகிறார்.

கௌதம் கார்த்திக்  படத்தின் டைட்டில் அறிவிப்பு… நாளை வெளியாகிறது மோஷன் டீசர்…

இந்த படத்தின் கதாநாயகியாக சாய் ப்ரியா தேவா நடித்து வருகிறார். இவர்களுடன் ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

கௌதம் கார்த்திக்  படத்தின் டைட்டில் அறிவிப்பு… நாளை வெளியாகிறது மோஷன் டீசர்…

இந்நிலையில் கௌதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண் சந்திரன் இயக்கும் இப்படத்திற்கு ‘செல்லப்பிள்ளை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை எஸ்.எஸ்.டி பிரொடக்ஷன் தயாரிக்க உள்ளது. இதையடுத்து தமிழ் புத்தாண்டான நாளை இந்த படத்தின் மோஷன் டீசர் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Share this story