ஒரு நாள் முழுக்க இடைவிடாமல் ஆடிய ஜிவி பிரகாஷ்!

ஒரு நாள் முழுக்க இடைவிடாமல் ஆடிய ஜிவி பிரகாஷ்!

வணக்கம்டா மாப்ள படத்தின் பாடலுக்கு ஜிவி பிரகாஷ் நாள் முழுதும் இடைவிடாமல் ஆடிக்கொண்டே இருந்தார் என்று சக நடிகை தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் முழுக்க இடைவிடாமல் ஆடிய ஜிவி பிரகாஷ்!

இயக்குனர் ராஜேஷ் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் ‘வணக்கம்டா மாப்ள‘ என்ற படம் உருவாகி வருகிறது. அம்ரிதா ஐயர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனந்தராஜ், ரேஷ்மா, டேனியல், ரேஷ்மா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியாக இருக்கிறது.

தற்போது இப்படத்தில் இணைந்துள்ள நடிகை சௌந்தர்யா பாலா நந்தகுமார் ஜிவி பிரகாஷ் ஒரு நாள் முழுக்க இடைவிடாமல் ஆடியதாகத் தெரிவித்துள்ளார்.

“எல்லா வகையிலும் ஈர்க்கப்பட்டுவிட்டேன்!
உங்களுடைய பெர்பார்மன்ஸைப் பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சி. சிறிதளவு கூட ஆற்றலை இழக்காமல் ஒரு நாள் முழுவதும் அயராது நடனம் ஆடுவது மிகவும் ஆச்சரியமாக இருந்தது! வணக்கம்டா மாப்ள படத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி
நீங்கள் நம்பமுடியாதவர்கள் ஜிவி பிரகாஷ் அவர்களே” என்று நடிகை சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.

Share this story