தனுஷ் படத்திலிருந்து விலகிய ஜிவி பிரகாஷ்!?

தனுஷ் படத்திலிருந்து விலகிய ஜிவி பிரகாஷ்!?

‘D43’ படத்தில் ஜிவி பிரகாஷுக்குப் பதிலாக மற்றொரு இசையமைப்பாளர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ், கார்த்திக் நரேன் உடன் கூட்டணி அமைக்கும் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘D43’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளனர்.

தனுஷ் படத்திலிருந்து விலகிய ஜிவி பிரகாஷ்!?

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. தனுஷ்- ஜிவி கூட்டணியில் உருவாகும் அனைத்துப் படங்களும் இசையில் சூப்பர் ஹிட் அடிப்பவை. பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் போன்ற படங்களின் இசை எந்தளவிற்கு வரவேற்பு பெற்றவை என்பது அனைவர்க்கும் தெரியும்.

தற்போது D43 படத்திற்கும் ஜிவி இசை என்றதுமே கோலிவுட் ரசிகர்கள் குதூகலித்தனர். ஆனால் தற்போது இப்படத்தில் ஜிவிக்குப் பதிலாக சான் ரோல்டன் இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜிவி சில காரணங்களால் இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டாராம்.

தனுஷ் படத்திலிருந்து விலகிய ஜிவி பிரகாஷ்!?

கார்த்திக் நரேன் இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் மலையாள திரைக்கதை எழுத்தாளர் ஷார்பு மற்றும் சுஹாஸ் ஆகியோருடன் இணைந்து திரைக்கதை எழுதி வருகிறார். கார்த்திக் நரேன் தனது முந்தைய படங்களைப் போலவே இந்த படத்தின் படப்பிடிப்பையும் வெகுசில நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

Share this story