ஹர்பஜன் சிங் – லாஸ்லியா கூட்டணியின் ‘ஃபிரண்ட்ஷிப்’… ஓடிடி வெளியீடு!?

ஹர்பஜன் சிங் – லாஸ்லியா கூட்டணியின் ‘ஃபிரண்ட்ஷிப்’… ஓடிடி வெளியீடு!?

ஹர்பஜன் சிங் லாஸ்லியா இணைந்து நடித்துள்ள ‘பிரண்ட்ஷிப்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ள திரைப்படம் ‘ஃபிரண்ட்ஷிப்’. இந்தப் படத்தின் மூலம் ஹர்பஜன் நடிகராகவும் தமிழிலும் அறிமுகமாகிறார்.

ஹர்பஜன் சிங் – லாஸ்லியா கூட்டணியின் ‘ஃபிரண்ட்ஷிப்’… ஓடிடி வெளியீடு!?

இந்தப் படத்தில் பிக்பாஸ் லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் அர்ஜுன் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. உதயகுமார் என்பவர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஹர்பஜன் சிங் – லாஸ்லியா கூட்டணியின் ‘ஃபிரண்ட்ஷிப்’… ஓடிடி வெளியீடு!?

தற்போது தியேட்டர்கள் முடங்கியுள்ளதால் பல படங்கள் ஓடிடி முடிவைக் கையில் எடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் ஃபிரண்ட்ஷிப் படமும் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

பிரபல ஓடிடி தளத்துடன் பேச்சு வார்த்தை இறுதி கட்ட நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story