இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைக் காலி செய்யப்போவது இவர் தான்!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைக் காலி செய்யப்போவது இவர் தான்!

மற்ற சீசன்களைப் போல் இல்லாவிட்டாலும் இந்த சீசன் சற்று பரபரப்புடன் தான் நகர்ந்து வருகிறது.

இந்த பிக்பாஸ் சீசனின் முதல் வாரத்தில் நடிகை ரேகா வீட்டைவிட்டு வெளியேறினார். இரண்டாவதாக பாடகர் வேல்முருகன் வீட்டிலிருந்து வெளியேறினார். மூன்றாவதாக சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறினார். அதையடுத்து பாடகி சுசித்ரா பல சர்ச்சைகளுடன் வெளியே வந்தார்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைக் காலி செய்யப்போவது இவர் தான்!

இந்த சீசன் தற்போது 50 நாட்களைக் கடந்துவிட்டது. இந்த வாரம் யார் எலிமினேட் ஆகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பார்வையாளர்கள் ஓட்டுக்கு வேலையில்லை. விஜய் டிவி நிர்வாகம் தான் யார் இருக்கவேண்டும் என்று முடிவு செய்வதாக நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Image

சமீபத்தில் கிடைத்துள்ள அப்டேட்டின் படி, இந்த வாரம் நடிகர் ஜித்தன் ரமேஷ் தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியளித்துள்ளது. ஜித்தனுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. எந்த வம்பு தும்புக்கும் போகாத என் தலைவன ஏன்டா வெளில அனுப்பப் போறீங்க என்று குமுறி வருகின்றனர்.

Share this story