அவருக்கு பதிலாக இவர்… இவருக்கு பதிலாக இன்னொருவர்… இயக்குனர் வெற்றிமாறன் படத்தின் அடுத்த டிவிஸ்ட்.!?

அவருக்கு பதிலாக இவர்… இவருக்கு பதிலாக இன்னொருவர்… இயக்குனர் வெற்றிமாறன் படத்தின் அடுத்த டிவிஸ்ட்.!?

வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்குகிறார் என்றால் அறிவிப்பு அந்த அடுத்தநாள் முதல் அந்தப்படம் பற்றி அடுத்தது ஆச்சர்ய அப்டேட் வந்துகொண்டே இருக்கும், தற்போது காமடி நடிகர் சூரியைப் பிரதான கதாபாத்திரமாக வைத்து அவர் ஒரு படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். சமீப காலமாக நாவலை அடிப்படையாக கொண்டே படங்களை எடுக்கும் வெற்றிமாறன் இந்தப் படத்தையும் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறு கதையை மையப்படுத்தியே எடுக்கிறார்.

அவருக்கு பதிலாக இவர்… இவருக்கு பதிலாக இன்னொருவர்… இயக்குனர் வெற்றிமாறன் படத்தின் அடுத்த டிவிஸ்ட்.!?

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படம் நடந்து கொண்டிருக்கும் போதே இயக்குனர் பாரதிராஜாவும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘கள்வன்’ பட ஷூட்டிங்க்காக அதே சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில்தான் இருந்தார். அதை முடித்துவிட்டு வெற்றிமாறன் படத்துக்குப் போகலாம் என்றிருந்தார். பாரதிராஜா இருந்த இடத்திலேயே எக்கச்சக்க குளிர். வெற்றிமாறன் படப்பிடிப்பு நடக்கும் இடம் அதைவிட உயரமான இடம் என்பதால், இயக்குநரைக் கூப்பிட்டு ‘சாரி வெற்றி, இங்கேயே என்னால சமாளிக்க முடியல.! என்னோட ஹெல்த் கண்டிஷனுக்கு அவ்வளவு தூரம் வந்து நடிக்கிறது சரிப்பட்டு வராது’ என்று சொல்ல, வெற்றிமாறனும் ‘அதனால என்ன சார்… நான் மேனேஜ் பண்ணிக்கிறேன். என்று சொல்லிவிட்டு, தனது ஆஸ்தான நடிகரான கிஷோரை ஒப்பந்தம் செய்திருந்தார்.

அவருக்கு பதிலாக இவர்… இவருக்கு பதிலாக இன்னொருவர்… இயக்குனர் வெற்றிமாறன் படத்தின் அடுத்த டிவிஸ்ட்.!?

படப்பிடிப்புக்கு வந்த இடத்தில் அவருக்கும் கிளைமேட் பிரச்சினை இருந்திருக்கிறது. அதனால், அவரும் தன்னிலை விளக்கம் கொடுத்து விலகிக்கொண்டார். இப்போது அவருக்குப் பதிலாக ஒப்பந்தம் ஆகியிருப்பவர் யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். யெஸ்… விஜய்சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதில் ஆச்சர்யமான இன்னொரு தகவல் என்னன்னா… விஜய்சேதுபதி நடிக்கப்போவது வயதான கேரக்டர். ஆனாலும் வலுவான கேரக்டர் என்பதாலும் வெற்றிமாறன் அழைப்பையும் ஏற்று ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அவருக்கு பதிலாக இவர்… இவருக்கு பதிலாக இன்னொருவர்… இயக்குனர் வெற்றிமாறன் படத்தின் அடுத்த டிவிஸ்ட்.!?

அதுக்கப்பறம் ஆள்மாறாட்டம் நடக்காது என்று உறுதியாக நம்பலாம்.

Share this story