டெக்னாலஜியில் ஜாம்பவானாக இருக்கும் கிறிஸ்டோபர் நோலன் பயன்படுத்தும் போன் இதுதானம் !

டெக்னாலஜியில் ஜாம்பவானாக இருக்கும் கிறிஸ்டோபர் நோலன் பயன்படுத்தும் போன் இதுதானம் !

ஹாலிவுட் ரசிகர்கள் பலருக்கும் பிடித்தமான ஒரு இயக்குனர் என்றால் அது கிறிஸ்டோபர் நோலன் தான். அவரது படங்கள் முதல் முறையே புரிந்துகொள்வதற்கு கடினமாக இருந்தாலும் கூர்ந்து கவனித்தால் நேர்த்தியான திரைக்கதை அமைந்திருக்கும்.

இவரது படங்களில் முக்கால்வாசி டெக்னாலஜி சம்பந்தபட்டதாகவே இருக்கும். அப்படி ஒரு டெக்னாலஜி புலியாக இருந்தாலும், நோலன் வைத்திருக்கும் மொபைல் போன் ஸ்மார்ட் போன் அல்லாது ஒரு சாதாரண மாடல் தான்.

டெக்னாலஜியில் ஜாம்பவானாக இருக்கும் கிறிஸ்டோபர் நோலன் பயன்படுத்தும் போன் இதுதானம் !

இதுகுறித்து கருத்து தெரிவித்த நோலன்,
“என்னிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்பது உண்மைதான். அவ்வப்போது என்னுடன் எடுத்துச் செல்லும் ஒரு சிறிய ஃபிளிப் ஃபோன் என்னிடம் உள்ளது. நான் எளிதில் மற்ற விஷயங்களில் திசைதிருப்பக்கூடியவன், அதனால் நான் ஒவ்வொரு முறையும் இன்டர்நெட் பயன்படுத்த விரும்பவில்லை. நான் சலித்துவிட்டேன், ” என தெரிவித்துள்ளார்.

டெக்னாலஜியில் ஜாம்பவானாக இருக்கும் கிறிஸ்டோபர் நோலன் பயன்படுத்தும் போன் இதுதானம் !

தொடர்ந்து பேசிய அவர், மக்கள் இப்போது ஆன்லைனில் தங்களின் பெரும்பாலானநேரத்தை செலவிடும் அதே வேளையில் நான் பல ஆக்கபூர்வமான செயல்களைச் செய்கிறேன். அதனால் அது எனக்கு நன்மை அளிக்கிறது. போன் வைத்திருப்பவர்கள் என்னை சுற்றி வேலை செய்வார்கள். எனவே நான் பணிபுரியும் போது தொடர்பு கொள்வது மிகவும் எளிதானது. நான் ஒருபோதும் மக்களுடன் தொடர்புகொள்வதில் குறிப்பாக ஆர்வம் காட்டவில்லை. ஒரு லேண்ட்லைனில் இருந்து மக்களை அழைப்பதை நான் விரும்புகிறேன். ஒவ்வொருவரும் தங்களின் நெருக்கமானவர்களைத் தொடர்பு கொள்ள ஒவ்வொரு வழியைப் பயன்படுத்துகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

டெக்னாலஜியில் பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் நோலன் வெறும் ஃபிளிப் ஃபோன் பயன்படுத்துவது அனைவருக்கும் ஆச்சர்யமாக உள்ளது.

Share this story