கொரானாவால் அஞ்சும் ஹாலிவுட் சினிமா… பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு…

கொரானாவால் அஞ்சும் ஹாலிவுட் சினிமா… பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு…

கொரானா தொற்று அதிகரித்து வருவதால் ஹாலிவுட் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கொரானாவின் இரண்டாவது அலை உலகையே ஆட்டி வைக்கிறது. இந்த தொற்றின் விரீயம் இந்தியாவை தாண்டி உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் புதிய கட்டுபாடுகளை விதித்து வருகின்றன. என்னதான் தடுப்பூசி வந்துவிட்டாலும் மக்களுக்கு பயம் என்பது இருக்கதான் செய்கிறது. எப்போதுதான் இந்த கொரானா என்ற அரக்கண் நம்மை விட்டு செல்வான் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.

கொரானாவால் அஞ்சும் ஹாலிவுட் சினிமா… பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு…

இது ஒருபுறம் இருந்தாலும் சினிமா உலகமும் தலைகீழாக மாறி வருகிறது. சின்ன பட்ஜெட்டில் உள்ளூரில் எடுக்கப்பட்ட படங்களே ரிலீஸ் செய்ய வழியின்றி கிடக்கின்றன. இதில் ஹாலிவுட் படங்களை சொல்லவா வேண்டும். பல ஆயிரம் கோடிகளை கொட்டி எடுக்கப்படும் படங்கள் ரிலீசை தேதியை தற்போது மாற்றி வருகின்றனர். சமீபத்தில் வெளியான ‘காஸ்சிலா வெர்சஸ் காங்’ பிரம்மாண்டமாக வெளியானலும், வசூல் ரீதியாக பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் மற்ற ஹாலிவுட் படங்களை வெளியிட தயாரிப்பு நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.

கொரானாவால் அஞ்சும் ஹாலிவுட் சினிமா… பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு…

தற்போது பிளாக் விடோ, வொண்டர் உமன், ஜேம்ஸ் பாண்ட் போன்ற படங்கள் வெளிவரத் தயாரானது. ஆனால் கொரானாவின் 2வது அலை தனது உக்கிரத்தை காட்ட தொடங்கியுள்ளதால் இந்த படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று டாம் க்ரூஸ் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான டாப் கன் படத்தின் இரண்டாம் பாகம் 34 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக இருந்தது. ஆனால் கொரானா அச்சுறுத்தலால் வரும் ஜூலை மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து டாம் க்ரூசின் மிஷன் இம்பாஸிபில் 7, மிஷன் இம்பாஸிபிள் 8 ஆகிய படங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் ரிலீசாக உள்ளது.

Share this story