போன வாரம் அஜித்குமார்; இந்த வாரம் ஜாக்கிசான்!

போன வாரம் அஜித்குமார்; இந்த வாரம் ஜாக்கிசான்!

பிரபலம் என்றாலே பிரச்சனையும் பின்வருவது வழக்கம்தான். அந்த வகையில் போனவாரம் அஜித்குமார் சந்தித்த அதே பிரச்சனை இந்த வாரம் ஜாக்கிசானுக்கு நேர்ந்திருக்கிறது.

தன்னுடைய அனுமதி பெற்ற பிரதிநிதி சுரேஷ் சந்திரா மட்டுமே என்றும், தனது பெயரை சொல்லி, தனக்கு மேலாளர் என்றும் சொல்லி எவரும் வந்தால் எச்சரிக்கையாக இருக்கவும் என்று தனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் வெளியிட்டார் நடிகர் அஜித்குமார்.

போன வாரம் அஜித்குமார்; இந்த வாரம் ஜாக்கிசான்!

அதுபோலவே, தனது நிறுவனத்தின் பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றார்கள் என்றும், அவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டி தனது ரசிகர்களையும், தொழில் சம்பந்தப்பட்டவர்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறார் நடிகர் ஜாக்கிசான்.

தனது ஜேசி குரூப் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பாக ஜாக்கிசான் வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், எங்களது சேவை வேண்டுமென்று விரும்புபவர்கள் மெயில் மூலம் எங்கள் நிறுவனத்தை நேரடியாக அணுகலாம். அதன்பின் எங்கள் நிறுவனத்தின் உறுப்பினர், சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொள்வார்.

எங்கள் பெயரைச் சொல்லி வருபவர்கள் மீது சந்தேகம் இருந்தால் உடனடியாக எங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன் என்று அறிக்கை மூலமாக கேட்டுக்கொண்ட ஜாக்கிசான், . எங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது தக்க சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

Share this story