கடலுக்கடியில் அவதார்களின் சாம்ராஜ்யம்... ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ டிரெய்லர் வெளியீடு !

AvatarTheWayOfWater

‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

AvatarTheWayOfWater

உலக சினிமா வரலாற்றில் அனைத்து ரசிகர்களின் மனதை வென்ற திரைப்படம் அவதார். கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். வழக்கமான சினிமா படங்கள் போன்று இல்லாமல் நம்மை வேறு உலகிற்கு எடுத்து சென்ற இந்த படம் இன்றைக்கும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது. 

AvatarTheWayOfWater

மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த இந்த படத்தின் இரண்டாம் உருவாகி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே இரண்டாம் பாகத்தின் பணிகள் நடைபெற்று வந்தது. முதல் பாகத்தை போன்று அவதாரின் வேறு உலகத்தை இந்த படத்தில் காணலாம் என்று தகவல்கள் கசிந்தன. 

AvatarTheWayOfWater

கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கடலுக்கடியில் சாம்ராஜ்யம் நடத்தும் அவதாரின் அழகான வாழ்க்கையை அழகாக காட்டப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கிராபிக்ஸில் மட்டுமே உருவாகியுள்ள இந்த படத்தி டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

 



 

Share this story