தயவு செய்து என்னை இதில் இழுக்காதீர்கள்… அனுராக் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வலிமை நடிகை காட்டம்!

தயவு செய்து என்னை இதில் இழுக்காதீர்கள்… அனுராக் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வலிமை நடிகை காட்டம்!

பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி அனுராக் மீதான பாலியல் குற்றசாட்டு குறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

நடிகை பயல் கோஷ் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இயக்குனர் அனுராக் காஷ்யப் குற்றம் சாட்டினார். இது பாலிவுட்டில் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. பின்னர் அனுராக் இந்த குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.

தயவு செய்து என்னை இதில் இழுக்காதீர்கள்… அனுராக் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வலிமை நடிகை காட்டம்!

இதையடுத்து அனுராக்கிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகை டாப்ஸி, அனுராக்கின் முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ், இரண்டாவது மனைவி கல்கி கோச்செலின், இயக்குனர்கள் அனுபவ் சின்ஹா, ராம் கோபால் வர்மா இன்னும் பலர் அனுராக்கிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

தற்போது நடிகை ஹுமா குரேஷி அனுராக் மீதான குற்றசாட்டுகள் குறித்து பதிவிட்டுள்ளார். ஹுமா அனுராக் இயக்கத்தில் கேங்ஸ் ஆப் வாசிபூர் படங்களில் நடித்துள்ளார்.

Anurag Kashyap

“அனுராக்கும் நானும் கடைசியாக 2012-13 இல் ஒன்றாக வேலை செய்தோம், அவர் ஒரு அன்பான நண்பர் மற்றும் மிகவும் திறமையான இயக்குனர். எனது தனிப்பட்ட அனுபவத்திலும் எனது அறிவிலும் அவர் என்னுடனோ அல்லது வேறு யாருடனோ தவறாக நடந்து கொண்டதில்லை. இருப்பினும், அவர் தவறு செய்ததாகக் கூறும் எவரும் அதை அதிகாரிகள், காவல்துறை மற்றும் நீதித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். சமூக ஊடக சண்டைகள் மற்றும் ஊடக சோதனைகளை நான் நம்பாததால் இப்போது கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தேர்வு செய்தேன். இந்த குழப்பத்திற்குள் இழுத்துச் செல்லப்படுவதை எண்ணி மிகவும் கோபமடைகிறேன். எனக்கு மட்டுமல்ல, பல வருட உழைப்பு மற்றும் போராட்டங்களுக்கு பின் வந்த ஒவ்வொரு பெண்ணும் இது போன்ற ஆதாரமற்ற கருத்துக்களுக்கும் அவர்களின் பணியிடத்தில் குற்றச்சாட்டுகளுக்கும் கூறுவதை நான் உணர்கிறேன். தயவுசெய்து இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளில் இருந்து விலகுவோம்.

#MeToo இன் புனிதத்தை கவனமாகப் பாதுகாப்பது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரின் கூட்டுப் பொறுப்பாகும். இது எனது இறுதி பதில். இந்த விஷயத்தில் மேலும் எந்த அறிக்கையும் தெரிவிக்க தயவுசெய்து என்னை அணுக வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.

ஹுமா குரேஷி தற்போது ஹெச் வினோத் அஜித் கூட்டணியில் உருவாகும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

Share this story