என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்… ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்… ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

திரைத்துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது இந்த வருடம் நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்தியத் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரும் ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தான் தாதாசாகேப் பால்கே விருது பெற்றதை அடுத்து ரஜினிகாந்த் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்… ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

அந்த அறிக்கை பின்வருமாறு:

“இந்தியத் திரையுலகின் மிக உயரிய தாதா சாஹேப் பால்கே விருது எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், மதிப்பிற்குரிய பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னில் இருந்த நடிப்புத் திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஒட்டுனரான நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் திரு.சத்யநாராயணா ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் திரு K. பாலச்சந்தர் அவர்களுக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள், மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும் உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்… ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

என்னை மனமார்ந்து வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு. எடப்பப்படி பழனிச்சாமி அவர்களுக்கும் மதிப்பிற்குரிய துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய எதிர் கட்சித் தலைவர் நண்பர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் – நண்பர் கமல் ஹாசன் அவர்களுக்கும், மத்திய மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்s. வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ் நாடு! ஜெய் ஹிந்த் !!! அன்புடன், ரஜினிகாந்த்!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story