நான் ஓட்டு போட்டேன், ஆனா விளம்பரப்படுத்தல… போலியான செய்திகளுக்கு சமுத்திரக்கனி பதிலடி

நான் ஓட்டு போட்டேன், ஆனா விளம்பரப்படுத்தல… போலியான செய்திகளுக்கு சமுத்திரக்கனி பதிலடி

நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி தான் ஓட்டுபோட்டதாகவும் அதை விளம்பரப்படுத்திவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த வருடம் வழக்கத்தை விட குறைவான வாக்குப் பதிவு சதவீதம் தான் கிடைத்துள்ளது. குறிப்பாக சென்னையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் தான் வாக்குப் பதிவு நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் ஓட்டு போட்டேன், ஆனா விளம்பரப்படுத்தல… போலியான செய்திகளுக்கு சமுத்திரக்கனி பதிலடி

தேர்தல் நாளில் பல திரைத்துறை பிரபலங்கள் வாக்களித்தனர். இதற்கிடையில் சிலர் வாக்களிக்கத் தவறினர். நடிகர் சமுத்திரக்கனி வாக்களித்தவாறு புகைப்படங்கள் ஏதும் வெளியாகாததால் அவர் வாக்களிக்கவில்லை என்ற செய்தி பரவியது.

தற்போது சமுத்திரக்கனி இது குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “நானும் என் மனைவியும் காலை 6.45 மணிக்கெல்லாம் நடந்தே வாக்குச் சாவடிக்குச் சென்றோம். அங்கு வாக்குப் பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 1 மணி நேரம் வரை காத்திருந்து முதல் ஆளாக ஓட்டு போட்டோம். ஆனால் நான் அதை விளம்பரப்படுத்தவில்லை. ஓட்டு போட்டுவிட்டுத்தான் படப்பிடிப்பிற்கு வந்தேன். நான் என் கடமையை செய்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story