ஏப்ரல் மாதம் மீண்டும் துவங்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு!?

ஏப்ரல் மாதம் மீண்டும் துவங்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு!?

‘இந்தியன் 2’ திரைப்படம் கைவிடப்படவில்லை என்றும் விரைவில் படப்பிடிப்பில் கமல்ஹாசன் இணையவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் ‘இந்தியன் 2‘ திரைப்படம் உருவாகி வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு கொரோனா வந்ததாலும் தள்ளிப்போனது. கொரோனாவுக்குப் பின் சிறிது காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்படி படம் ஆரம்பித்ததிலிருந்து இழுபறியாகவே போய்க்கொண்டிருக்கிறது.

ஏப்ரல் மாதம் மீண்டும் துவங்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு!?

இதற்கிடையில் கமல் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி வைத்து ‘விக்ரம்’ படத்தில் கமிட் ஆகிவிட்டார். பிக்பாஸ் மற்றும் தேர்தல் வேலைகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதற்கிடையில் இந்தியன் 2 படத்தின் நிலை என்ன என்ற கேள்வியும் எழுந்தது.

ஏப்ரல் மாதம் மீண்டும் துவங்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு!?

தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் 60 சதவீத காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் சித்தார்த் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் உடன் படப்பிடிப்பு மீண்டும் துவங்க உள்ளதாம். தேர்தலுக்குப் பின்னர் கமல் மீண்டும் படப்பிடிப்பில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Share this story