தளபதி 65 படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கும் கவின்!?

தளபதி 65 படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கும் கவின்!?

தளபதி 65 படத்தில் பிக்பாஸ் கவின் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 65’ படத்தில் பிக்பாஸ் கவின் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன.

தளபதி 65 படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கும் கவின்!?

இன்று தளபதி 65 படத்தின் பூஜை சன் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அதில் விஜய், நெல்சன், விடிவி கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த பூஜையில் கவினும் கலந்துகொண்டுள்ளார். எனவே தான் கவின் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.

சீரியல் மூலமாக திரையில் அறிமுகமான கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து மிகவும் பிரபலமானார். அதையடுத்து, தற்போது ‘லிப்ட்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதுபோக பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார் கவின்.

தளபதி 65 படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கும் கவின்!?

தற்போது கவின் தளபதி 65 படத்தில் இணைந்துள்ளதார் என்ற செய்தி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.

‘தளபதி 65’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இன்று பூஜையுடன் இரண்டு நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்திவிட்டு அதையடுத்து படக்குழு ரஷ்யா பறக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story