உலகளவில் டாப் ரேட்டிங் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்த ‘சூரரைப் போற்று’!?

உலகளவில் டாப் ரேட்டிங் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்த ‘சூரரைப் போற்று’!?

‘சூரரைப் போற்று’ திரைப்படம் அதிக ரேட்டிங் பெற்ற படங்களின் பட்டியலில் உலகளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று‘ திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

உலகளவில் டாப் ரேட்டிங் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்த ‘சூரரைப் போற்று’!?

ஏர் டெக்கான் விமானசேவை நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். படத்தில் அனைவரும் மிகச்சிறப்பாக பணியாற்றி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெறச் செய்தனர்.

அதையடுத்து சூரரைப் போற்று படத்திற்கு பல விருதுகளும் அங்கீகாரமும் கிடைத்தன. ஆஸ்கர் விருதுக்கு கூட இந்தப் படம் அனுப்பப்பட்டது.

தற்போது சூரரைப் போற்று திரைப்படம் ஐஎம்டிபி (IMDB) தளத்தின் அதிக ரேட்டிங் பெற்ற படங்களின் வரிசையில் உலகளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இதை கோலிவுட் ரசிகர்கள் பலரும் கொண்டாடவும் ஆரம்பித்துவிட்டனர்.

உலகளவில் டாப் ரேட்டிங் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்த ‘சூரரைப் போற்று’!?

ஆனால் இது முற்றிலும் தவறான செய்தி. எடிட்டிங் செய்யப்பட்ட போலியான புகைப்படம் அது. சூரரைப் போற்று படத்திற்கு 9.1 ரேட்டிங் கிடைத்துள்ளது உண்மை தான். ஆனால் டாப் ரேட்டிங் பட்டியலில் மூன்றாம் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story