சிவாஜியின் சூப்பர் ஹிட் பட தலைப்பைக் கைப்பற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ்!?

சிவாஜியின் சூப்பர் ஹிட் பட தலைப்பைக் கைப்பற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ்!?

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் ‘தி கிரேக் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்தப் படம் மலையாளத்தில் மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் பேசுபொருளாகவும் மாறியது.

சிவாஜியின் சூப்பர் ஹிட் பட தலைப்பைக் கைப்பற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ்!?

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் தான் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளதால் தமிழிலும் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

சிவாஜியின் சூப்பர் ஹிட் பட தலைப்பைக் கைப்பற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ்!?

இந்தப் படத்திற்கு ‘பராசக்தி’ என்று தலைப்பு வைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பராசக்தி என்றால் பெண்களின் சக்தியைக் குறிப்பிடுவதாக உள்ளதால் படத்திற்கு இந்தத் தலைப்பு வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Share this story