1997 to 90-களின் பிற்பகுதி… கர்ணன் படக்குழுவினரின் செயலால் மீண்டும் உதயநிதி அதிருப்தி!?

1997 to 90-களின் பிற்பகுதி… கர்ணன் படக்குழுவினரின் செயலால் மீண்டும் உதயநிதி அதிருப்தி!?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கர்ணன் படத்தில் கதை 1997-ல் நடந்ததாகக் காண்பித்திருந்தனர். ஆனால் கொடியன்குளம் கலவரம் நடந்தது 1995-ம் ஆண்டு. படத்தில் 1997-ம் ஆண்டு என்று காண்பிக்கப்பட்டதால் அது சர்ச்சைக்கு உள்ளானது. அதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் அதை மாற்றக் கோரி படக் குழுவினருடம் கோரிக்கை வைத்ததாகத் தெரிவித்திருந்தார்.

1997 to 90-களின் பிற்பகுதி… கர்ணன் படக்குழுவினரின் செயலால் மீண்டும் உதயநிதி அதிருப்தி!?

தற்போது 90-களின் பிற்பகுதி என்று படத்தில் மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இது 1997-ம் வருடத்தை தான் மீண்டும் குறிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் “கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் – இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்.

படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும்’90-களின் இறுதியில்’ என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன

ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை.அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story