ஊழியருக்கு கார் பரிசளித்து ஆச்சர்யப்படுத்திய பாலிவுட் நடிகை!

ஊழியருக்கு கார் பரிசளித்து ஆச்சர்யப்படுத்திய பாலிவுட் நடிகை!

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது ஊழியர் ஒருவருக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த மாடல் ஜாக்குலின் பெர்னாண்டஸ் 2006 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ஸ்ரீலங்கா பட்டம் வென்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘அலாதீன்’ என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதையடுத்து, ‘மர்டர் 2’, ‘ஹவுஸ்ஃபுல் 2’, ‘ரேஸ் 2’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஊழியருக்கு கார் பரிசளித்து ஆச்சர்யப்படுத்திய பாலிவுட் நடிகை!

இந்நிலையில், நேற்று தசரா திருநாளை முன்னிட்டு தான் திரையுலகில் அறிமுகமானத்திலிருந்து தன்னுடன் இருக்கும் ஊழியர் ஒருவருக்கும் ஜாக்குலின் காரை பரிசாக அளித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.

தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலிருந்து அந்த காரை வழங்கியுள்ளார். முன்னதாக, ஜாக்குலின் தனது மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவருக்கும் கார் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது”

ஜாக்குலின் தற்போது சல்மான் கானுடன் கிக் 2 படத்தில் நடித்து வருகிறார்.

Share this story